fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெள்ளை வேன் சந்தேக நபர்கள் நீதிமன்றில்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:09

வெள்ளை வேன் சந்தேக நபர்கள் நீதிமன்றில்

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறித்த வெள்ளைவேன் சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதேநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்;டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தமக்கு 20 இலட்சம் ரூபா பணத்தை வழங்குவதாக அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் வாக்குறுதியளித்ததாக சந்தேக நபர்கள் வாக்குமூலமளித்துள்ளனர். வெள்ளைவேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க