வியலுவ பிட்டமாருவ, களுகஹகதுர பிரதான வீதியின் 9வது மைல் கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். கெப் வண்டியொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலக முடிவை பார்வையிடுவதற்கு சென்றவர்களே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். விபத்தின்போது கெப் வண்டியில் 6 பேர் இருந்துள்ள நிலையில் இருவர் பலத்த காயமடைந்ததோடு, ஏனைய நால்வர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலத்தகாயங்களுக்குள்ளான இருவரும் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கெப் வண்டியின் வேகத்தடை செயலிழந்தமையே விபத்துக்கு காரணமென வாகனத்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.