மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது 5 வருடங்களாக சூட்சுமமாக மூடிமறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் மூளையாக செயற்பட்டுள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மோசடியை மூடி மறைப்பதற்கு முன்னாள் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த செயற்பாட்டினால் 5 வருடங்களாக அனுபவித்த நட்டத்திற்கு அவர் பொறுப்புக்கூறவேண்டுமென முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான தொழில்நுட்ப செயற்பாடுகளில் விசேடமாக அரசியல்வாதிகள் கை வைப்பது தவறானதாகும். இவ்வாறான செயற்பாடுகளினால் பொருளாதாரம் மீதான நம்பிக்கை சிதைந்துவிடுகிறது. குறித்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய தேவை காணப்படுகிறது. இதற்கான சந்தர்ப்பம் தற்போது காணப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தவறை சரியாக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார்களென தான் நம்புவதாகவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.