திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவ என்பவரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினர் களனி பெதியாகொட வீதியில் வைத்து அவர்களை கைதுசெய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து இரண்டு கிரேம் எடைகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஏற்கனவே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ள சமீர என்பவரின் சகோதரரும் உள்ளடங்குவதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.