நீர்க்கொழும்பின் சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2020 12:55

நீர்க்கொழும்பின் சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு

நீர்க்கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 09.00 மணிமுதல், நாளை மறுதினம் காலை 09.00 மணிவரையான 24 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. பம்புக்குளிய நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்நீர்வெட்டு அமுலாவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொச்சிக்கடை, தூவ, பிட்டிபண, தூனுகல்ப்பிட்டிய, பாசியாவத்த, பமுனுகம மற்றும் கட்டான ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுலாகும். அதேபோல் கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி வலயம் மற்றும் விமானப்படை வளாகம் ஆகியவற்றிலும் நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2020 12:55

Default