fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹப்புத்தளையில் விமான விபத்து (PHOTOS)

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2020 12:32

ஹப்புத்தளையில் விமான விபத்து (PHOTOS)

ஹப்புத்தளையில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான லு 12 ரக விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. வான் பரப்பு பாதுகாப்பு பணிகளுக்கென வீரவில விமானப்படை தளத்திலிருந்து பயணித்த விமானம் ஹப்புத்தளை நகருக்கருகில் உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளார். அவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2020 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க