மீண்டும் அணுவாயுத சோதனைகளை மேற்கொள்ளப்போவதாக வடகொரியா அறிவிப்பு
Related Articles
மீண்டும் அணுவாயுத சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதியும், வடகொரிய தலைவரும் சந்தித்து கலந்துரையாடினர். இதனையடுத்து அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை நிறுத்துவதாக வடகொரியா அறிவித்தது. அமெரிக்கா தமது நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டுமென வடகொரியா நிபந்தனை விதித்தது.
எனினும் வடகொரியா மீதான தடைகள் நீக்கப்படவில்லை. இதனால் இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் அன் அறிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து புதிய வகையான அணுவாயுதத்தை உலகம் காணுமென அந்நாட்டு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.