சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கென விசேட வேலைத்திட்டங்கள்
Related Articles
சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கென விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடல் மார்க்கமாக வெளிநாடு செல்வது மற்றும் நாட்டுக்குள் நுழைவது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை இதன்போது கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இதேபோன்று அவஸ்திரேலியாவும் தமது எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை கடுமையாக அமுல்படுத்தி வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.