fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 11:35

ஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல்

ஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு உதயமானதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். சகல அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதான வர்த்தக பகுதியொன்றில் வீதியை மறித்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் பிரயோக தாக்குதல்களை மேற்கொண்டனர். சம்பவத்தின் போது 400க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 11:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க