திட்டமிட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது
Related Articles
திட்டமிட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெரனியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலிபட பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபான வகைகள் என்பன கைதுசெய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் அங்கொட லொக்கா எனப்படும் நபருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த தெரனியகல மஞ்சு என்பவரின் நெருக்கமான நண்பரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.