Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
எதனோல் இறக்குமதிக்கு நேற்று முதல் தடை
Related Articles
மதுபான தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் எதனோல் இறக்குமதியை உடன் கைவிட நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரதமரின் உத்தரவுக்கமைய எதனோல் இறக்குமதி நேற்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தேவையான அளவு எதனோல் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக இறக்குமதியை கைவிட தீர்மானித்ததாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்று முதல் சில விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் யாசகம் செய்தல், பயணிகள் பஸ் வண்டிகளில் அதிக சத்தங்களுடன் பாடல்களை ஒலிபரப்புதல் ஆகியவற்றுக்கும் தடைசிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அறிவித்த புதிய வரி நடைமுறை முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது.
இதேவேளை நேற்று முதல்அமுலுக்கு வரும் வகையில் சகல முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தேசிய முச்சக்கரவண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 60 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கிலோமீற்றலிருந்து அடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 45 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக முச்சரவண்டிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்தார். காபன் வரி நீக்கம், புகை சான்றிதழுக்கான கட்டண குறைப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.