fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 10:44

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

2020ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. 37 தேசிய பாடசாலைகள் உட்பட சகல பாடசாலைகளிலும் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளின் முதற்கட்டம் இடம்பெற்று வருகிறது. இதற்கென 84 பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஜனவரி 4ம் திகதியே நிறைவடையவுள்ளன. இந்நிலையில் விடைத்தாள் திருத்தப்பணிகள் இடம்பெறும் 84 பாடசாலைகளில் 37 பாடசாலைகள் இன்றும் எஞ்சிய 47 பாடசாலைகள் எதிர்வரும் 6ம் திகதியும் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க