வடமாகாண ஆளுநர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 10:56

வடமாகாண ஆளுநர் இன்று தமது  கடமைகளை பொறுப்பேற்பு

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே அவர் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாகவும் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் அரசாங்க அதிபராகவும் பணியாற்றியுள்ளார். அதற்கமைய வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 10:56

Default