முச்சக்கர வண்டி பயணக்கட்டணம் இன்றுமுதல் குறைப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 12:13

முச்சக்கர வண்டி பயணக்கட்டணம் இன்றுமுதல் குறைப்பு

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக்கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சுயதொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது. டயர் உள்ளிட்ட பொருட்களுக்கு அறவிடப்படும் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்தார்.

முதலாவது கிலோமீற்றர் 10 ரூபாவாலும் இரண்டாவது கிலோமீற்றர் 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. காபன் வரி உள்ளிட்ட பல வரிக்குறைப்பு காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும் போது 40 முதல் 50 வரை கட்டணத்தை செலுத்துமாறும் அதற்கு மேலதிமாக கட்டணம் செலுத்துவதை நிராகரிக்குமாறு ங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 12:13

Default