பயணிகள் பஸ்வண்டிகளில் அதிகசப்தத்துடன் பாடல்களை ஒலிபரப்ப இன்று முதல் தடை
Related Articles
தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒலி, ஒளிபரப்பு செய்ய இன்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இன்றிலிருந்து பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் விடியோ காட்சிகள் ஒலிபரப்பபடின் அதுகுறித்து 1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.