fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 05:21

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்நாட்டில் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம், அரசியல் சமூக, கலாசார மற்றும் தொழிநுட்பம் ஆகிய சகல துறைகளிலும் புதிய யுகம் நாட்டில் வளரவேண்டுமென சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ள தருணத்திலேயே புத்தாண்டு மலர்ந்துள்ளது.

மலர்ந்துள்ள இப்புத்தாண்டடை புதிய அரசாங்கம் சுபீட்சத்தின் ஆண்டாக மாற்றும் திட உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கிறது. எமக்கே உரித்தான தொலை நோக்கினை கொண்டதொரு தேசமாக கடந்த காலங்களில் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து வெளிப்படுத்துவதன் ஊடாக சுபீட்சத்தை அடையும் அபிலாஷையுடனேயே அரசாங்கம் புத்தாண்டில் தடம் பதிக்கிறது.

ஒழுக்க, பண்பாடான சமூகத்தினால் பலப்படுத்தப்படும் பாதுகாப்பானதொரு தேசமே மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும். நாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே இந்த புதிய அரசாங்கமாகும். அதற்கமைய புத்தாண்டு பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியானது புதியதொரு தேசத்தை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு செயற்திட்டத்தை இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையும் ஆகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்;த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 05:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க