பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 05:00

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

நாட்டை கட்டியெழுப்பும் யுகமாக இப்புத்தாண்டு அமையவேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிறக்கும் 21 ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தினை இலங்கையின் தசாப்தமாக மாற்றியமைப்போம். மக்களின் மிகப்பெரிய ஆணையுடன் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள பின்புலத்திலேயே இலங்கை இவ்வாறு புதிய தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

ஆட்சி மாற்றத்துடன் புதியதோர் இலங்கை தொடர்பான எதிர்பார்ப்பு எமது இளம் சந்ததியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் எவ்வித தலையீடுமின்றி நாடு முழுவதும் இளைஞர் யுவதிகள் சுயமாக தமக்கு மத்தியில் ஓர் ஒழுங்கமைப்பினை ஏற்படுத்தி புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு தலைமைத்துவத்தினை வழங்குகின்றனர். நாடு முழுவதும் பொது இடங்களில் சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்படுகின்றன. சில இளைஞர்கள் ஒன்றிணைந்து சுயமாக முன்வந்து விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். எனவே தமது நாட்டை தாமே முன்னேற்றும் திடசங்கற்பத்துடன் இந்த இளைஞர்களின் உற்சாகம் புதிய தசாப்தத்தை நோக்கி செல்லும் எமக்கு பெறுமதியான வளமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 05:00

Default