செயற்திறன்மிக்க நாட்டை கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டும் : ஜனாதிபதி

செயற்திறன்மிக்க நாட்டை கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டும் : ஜனாதிபதி 0

🕔18:07, 29.டிசம்பர் 2019

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் செயற்படுவது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பென ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். குறித்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் ஒத்துழைப்பு காலத்தின் தேவையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வேலை செய்யும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேசசபை தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி

Read Full Article
தேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை

தேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை 0

🕔17:50, 29.டிசம்பர் 2019

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி சினிமா என தனது திறமையை வெளிக்காட்டி கொண்டிருக்கும் நடிகை ஆகும். அந்தவகையில் அண்மையில்  மகாநடி படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருது பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறுகையில், மதிப்புமிக்க விருதை பெற்ற அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த

Read Full Article
சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலான வேலைத்திட்டங்கள்

சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலான வேலைத்திட்டங்கள் 0

🕔15:47, 29.டிசம்பர் 2019

சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாப்பயணிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை முடிந்தளவு குறைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை நெதர்லாந்து சுற்றுலாப்பயணிகள் மூவர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு அமைச்சர பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்கள்

Read Full Article
உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து கவனம்

உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து கவனம் 0

🕔15:47, 29.டிசம்பர் 2019

உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read Full Article
பிஜி தீவில் சூறாவளி தாக்கத்தினால் பாரிய பாதிப்பு

பிஜி தீவில் சூறாவளி தாக்கத்தினால் பாரிய பாதிப்பு 0

🕔15:44, 29.டிசம்பர் 2019

பிஜி தீவில் சூறாவளி தாக்கத்தினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சர்வதேவ விமான போக்குவரத்துக்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. வீடுகள் பல முழுமையாக சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மின்சாரம் மற்றும் தொடர்பாடல் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சூறாவளியினால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமல்போயுள்ளார். 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கியுள்ளதாக பிஜி செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் கட்டமைப்புக்கள் இன்று ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைப்பு

இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் கட்டமைப்புக்கள் இன்று ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைப்பு 0

🕔15:43, 29.டிசம்பர் 2019

சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய 8 ரயில் கட்டமைப்புக்கள் இன்றையதினம் ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட ரயில் பெட்டிகள் ஜனவரி முதல் வாரத்திலிருந்து சேவையில் இணைக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை பிக்குகள் உள்ளிட்ட சமய தலைவர்களுக்கு ரயில் நிலையங்களில் காணப்படும் வசதிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read Full Article
அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 848 பேருக்கு எதிராக வழக்கு

அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 848 பேருக்கு எதிராக வழக்கு 0

🕔15:43, 29.டிசம்பர் 2019

நிர்ணய விலைக்கும் அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட 848 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 20ம் திகதி முதல் நாடு முழுவதும் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாடு மற்றும் சம்பா அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

Read Full Article
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு 0

🕔15:41, 29.டிசம்பர் 2019

புறக்கோட்டை சந்தையில் சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ஹேமக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். மேலும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து அவற்றின் விலைகளும் பாரியளவில் குறைவடைந்துள்ளன. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 60 முதல்

Read Full Article
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான வைத்திய பரிசோதனை அரச வைத்தியசாலையூடாக..

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான வைத்திய பரிசோதனை அரச வைத்தியசாலையூடாக.. 0

🕔15:38, 29.டிசம்பர் 2019

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதனுடன் தொடர்புடைய வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழை அரச வைத்தியசாலையூடாக விநியோகிக்கும் நடவடிக்கையை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சேவை வழங்கும் போது மோசடிகள் இடம்பெறுவதை

Read Full Article
புகைப்பொருள் பாவனை தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் ஆய்வு

புகைப்பொருள் பாவனை தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் ஆய்வு 0

🕔15:38, 29.டிசம்பர் 2019

புகைப்பொருள் பாவனை தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் ஆய்வொன்றை முன்னெடுக்கவுள்ளதாக புகைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அனுசரணையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வயது மட்டத்தின் அடிப்படையில் புகைப்பொருள் மற்றும் புகையிலை பாவனை தொடர்பில் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இவ்வாய்வுக்கென 10 ஆயிரம் பேர் வரை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

Read Full Article

Default