நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா ஹோட்டல்களையும் பதிவுசெய்ய நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா ஹோட்டல்களையும் பதிவுசெய்ய நடவடிக்கை 0

🕔10:43, 30.டிசம்பர் 2019

நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா ஹோட்டல்களையும் பதிவுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. சுற்றுலா ஹோட்டல்களின் தரத்தை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பதிவுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ப்ரசன்ன ரணதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read Full Article
உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் இன்று முதல் வெளியீடு

உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் இன்று முதல் வெளியீடு 0

🕔10:23, 30.டிசம்பர் 2019

உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளன. ஒருநாள் சேவையூடாக அல்லது சாதாரண சேவையின் கீழ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடிமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையளத்தளம் ஊடாக சான்றிதழை பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக 48 மணித்தியாலங்களில் வீட்டிலிருந்தே பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read Full Article
சுவிட்சர்லாந்து தூதுரக பெண் அதிகாரி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

சுவிட்சர்லாந்து தூதுரக பெண் அதிகாரி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை 0

🕔10:05, 30.டிசம்பர் 2019

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதுரக பெண் அதிகாரி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். தான் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். எனினும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய , குறித்த அதிகாரி வழங்கிய தகவல்களில் கருத்து வேறுபாடு காணப்பட்டதால் அவர் கைதுசெய்யப்பட்டார். கடந்த 16ம் திகதி அவர் கொழும்பு பிரதான நீதவான்

Read Full Article
ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை 0

🕔10:05, 30.டிசம்பர் 2019

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ள விசேட பேச்சுவார்த்தைக்கென, அவர்கள் சிறிகொத்த கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று

Read Full Article
பிரதான நகரங்களின் வெப்பநிலை அதிகரிப்பு

பிரதான நகரங்களின் வெப்பநிலை அதிகரிப்பு 0

🕔07:10, 30.டிசம்பர் 2019

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனுராதபுரம் காலி முதலான நகரங்களில் எதிர்வரும் 36 மணித்தியாளங்களில் வெப்ப நிலை 30 செல்சியஸ்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை வைத்தியர் பரிந்துரை..

ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை வைத்தியர் பரிந்துரை.. 0

🕔19:01, 29.டிசம்பர் 2019

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மீண்டும் லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் ராஜித்த சேனாரத்னவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கென தனியார் வைத்திசாலையிலிருந்து அழைத்து சென்ற சந்தர்ப்த்தில் ஏற்பட்ட நெருக்கடியான நிலையை அடுத்து மீண்டும் குறித்த வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே. டபிள்யு தென்னகோன் தெரிவித்தார்.

Read Full Article
நிவ்யோர்க்கின் வடபகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து  தாக்குதலில் ஐவர் காயம்

நிவ்யோர்க்கின் வடபகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் காயம் 0

🕔18:33, 29.டிசம்பர் 2019

நிவ்யோர்க்கின் வடபகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஐவருக்கு பலத்த காயமேற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆன்மீக நிகழ்வொன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்பின் தப்பிச்சென்ற சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நிவ்யோர்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை 0

🕔18:30, 29.டிசம்பர் 2019

நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உள்ளடக்கிய திருத்த சட்டமூலம் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பண வைப்பை பொறுப்பேற்கும் நிதி நிறுவனங்களை மாத்திரமே இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்த முடியும். இந்நிலையில் நுண்நிதி நிறுவனங்கள்

Read Full Article
அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி 0

🕔18:28, 29.டிசம்பர் 2019

நியுசிலாந்துக்கு எதிரான இராண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டி கடந்த 26 ம் திகதி மெல்பேர்ணில் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு முதல் இனிங்சை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 319 ஓட்டங்கள் முன்னிலையிர் இரண்டாவது இனிங்சை

Read Full Article
பாடசாலை சீருடை வவுச்சர் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஜனவரி 3ம் திகதியுடன் நிறைவு

பாடசாலை சீருடை வவுச்சர் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஜனவரி 3ம் திகதியுடன் நிறைவு 0

🕔18:25, 29.டிசம்பர் 2019

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி 3 ம் திகதியுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வலய மட்டத்தில் தற்போது பாடப்புத்தங்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article

Default