வளிமண்டல தாழமுக்க நிலை : இன்றும் நாளையும் மழைவீழ்ச்சி அதிகரிப்பு

வளிமண்டல தாழமுக்க நிலை : இன்றும் நாளையும் மழைவீழ்ச்சி அதிகரிப்பு 0

🕔11:17, 4.டிசம்பர் 2019

நாட்டின் தெற்கு வளிமண்டலத்தில் வளிமண்டல தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாகாணங்களில் இன்றும் நாளையும் மழைவீழ்ச்சி அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். கடற்பகுதிகளில் மழையின் போது மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Read Full Article
வாகனங்களுக்காக அறவிடப்பட்டு வந்த காபன் வரி நீக்கம்

வாகனங்களுக்காக அறவிடப்பட்டு வந்த காபன் வரி நீக்கம் 0

🕔10:30, 4.டிசம்பர் 2019

வாகனங்களுக்காக அறவிடப்பட்டுவந்த காபன் வரி நீக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் ச்சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. வெட் வரி குறைக்கப்பட்டதனூடாக மோட்டார் வாகனங்களுக்கான புகை பரிசோதனை கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.

Read Full Article
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை 0

🕔10:28, 4.டிசம்பர் 2019

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை ஆரம்பமாகுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். தேர்தல் சட்டம், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

Read Full Article
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தனது 57 வது வயதில் காலமானார்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தனது 57 வது வயதில் காலமானார் 0

🕔10:28, 4.டிசம்பர் 2019

காலம்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்ஷாவின் பூதவுடல் இன்றையதினம் நாட்டிற்கு எடுத்து வரப்படவுள்ளது. பாராளுமன்ற கட்டத்தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர் பூதவுடல் கொடக்கவெல்ல மஸ்இம்புல பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துசெல்லப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இடம்பெறும் தினம் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை. சிங்கப்பூரில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரது ரஞ்சித்

Read Full Article
முன்னாள் பிரதமர் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்..

முன்னாள் பிரதமர் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.. 0

🕔16:27, 3.டிசம்பர் 2019

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். பிரதமர் பதவியில் செயல்பட்ட காலத்திற்குள் மகா சங்கத்தினர் வழங்கிய பங்களிப்பு தொடர்பாக இதன் போது அவர் நன்றி தெரிவித்தார். மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க மகாநாயக்க தேரர் அதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்.

Read Full Article
பலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி

பலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி 0

🕔14:42, 3.டிசம்பர் 2019

கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் இடம்பெற்றது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களில் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார். போர்த்துக்கல்லின் அணித் தலைவரான கிறிஸ்டியானோ

Read Full Article
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக..

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக.. 0

🕔14:37, 3.டிசம்பர் 2019

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டத் திருத்தப் பணிகள் டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி

Read Full Article
சீரற்ற வானிலையினால் 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்தோர் பாதிப்பு

சீரற்ற வானிலையினால் 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்தோர் பாதிப்பு 0

🕔12:49, 3.டிசம்பர் 2019

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வலப்பனை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு மூவர் பலியாகியுள்ளனர். மேலுமொருவர் காணாமல்போயுள்ளார். முப்படையினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ

Read Full Article
எரிபொருள் விலைச்சூத்திரத்தை நீக்க அரசாங்கம் தீர்மானம்

எரிபொருள் விலைச்சூத்திரத்தை நீக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔12:48, 3.டிசம்பர் 2019

எரிபொருள் விலை சூத்திரத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்போவதில்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கென அமைச்சரவையின் பரிந்துரை கிடைத்தவுடன் விலை சூத்திரத்தை ரத்துச்செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட நிலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டுக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பில்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின்

Read Full Article
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு : கனடா

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு : கனடா 0

🕔12:44, 3.டிசம்பர் 2019

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இதற்கென கனடா 2 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இதற்கென விசேட மனித வள ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென கனடிய வெளிவிவகார அமைச்சர் பென்ஷுவா ப்ளிப் தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default