நுகர்வுக்கு பொருந்தாத அரிசி குறித்து நாடு பூராகவும் சுற்றி வளைப்பு

நுகர்வுக்கு பொருந்தாத அரிசி குறித்து நாடு பூராகவும் சுற்றி வளைப்பு 0

🕔14:43, 4.டிசம்பர் 2019

அநுராதபுர மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியத்தில் காணப்படுகின்ற நாற்பத்தேழரை இலட்சம் கிலோ நெல்லை துரிதமாக அரிசியாக மாற்றப்போவதாக அநுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு மாற்றப்படுகின்ற அரிசியை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு

Read Full Article
யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு 0

🕔14:33, 4.டிசம்பர் 2019

நாட்டை சூளவுள்ள கடற்பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பாதுகாப்பு படைப்பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. யாழிலுள்ள இராணுவ அதிகாரிகள் குருநகர் கடல்தொழில் சங்கம் மற்றும் சுயேட்சை குழுக்களும் இதில் இணைந்துள்ளன. இதற்கிணைவாக நாட்டின் மேலும் பல பகுதிகளிலும் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றுவருவதாக எமது

Read Full Article
13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்

13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம் 0

🕔14:25, 4.டிசம்பர் 2019

13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஹட்டன் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த இவர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு குறித்த போட்டியை 30 நிமிடங்கள் 49.20 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப்பதக்கம் வென்றார். குறித்த 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சன்முகேஷ்வரன்

Read Full Article
அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுப்பு 0

🕔14:23, 4.டிசம்பர் 2019

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் சட்டத்தின் கீழ் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மூன்று நீதிபதிகள் அடங்கிய நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் அர்ஜூன் மகேந்திரனை கைதுசெய்யுமாறு

Read Full Article
மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பு

மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பு 0

🕔14:22, 4.டிசம்பர் 2019

மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அதிகளவான பாதிப்பு ஆபிரிக்க வலய நாடுகளிலேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மலேரியா காரணமாக 4 இலட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆபிரிக்க வலய நாடுகளை சேர்ந்த சிறுவர்களும், கர்ப்பிணி

Read Full Article
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் 0

🕔13:20, 4.டிசம்பர் 2019

பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பபட்டுள்ளன. குறித்த புலமைப்பரிசில்கள் கல்விப்பொதுத்தராதர உயர்தரம், பட்டப்படிப்பு கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழிநுட்ப கல்லூரிகளில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்த்தானிகர் ஆலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்தில்

Read Full Article
வலப்பனை கற்குவாரியின் அனுமதிபத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை

வலப்பனை கற்குவாரியின் அனுமதிபத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை 0

🕔13:11, 4.டிசம்பர் 2019

வலப்பனை மண்சரிவுக்கு காரணமென கருதப்படும் கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கற்குவாரியை மூடுமாறு வலியுறுத்தி மலபட்டாவ பகுதி மக்கள் தொடர்ந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் இன்று காலை மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன்போது தரமான ஆய்வினை முன்னெடுத்து

Read Full Article
வெனிசுவேலா ஜனாதிபதிக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை

வெனிசுவேலா ஜனாதிபதிக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை 0

🕔12:16, 4.டிசம்பர் 2019

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இதற்கமைய ஆர்ஜென்டினா, பிரேஸில், அமெரிக்கா, கொலம்பியா, சிலி, பெரு உள்ளிட்ட அமெரிக்க நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதனை ஏற்றுக் கொள்ள

Read Full Article
புதிய அமைச்சரவையின் 2வது அமைச்சரவை கூட்டம் இன்று

புதிய அமைச்சரவையின் 2வது அமைச்சரவை கூட்டம் இன்று 0

🕔12:11, 4.டிசம்பர் 2019

புதிய அமைச்சரவையின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம்பெறும் குறித்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read Full Article
சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்து 252 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 468 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்து 252 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 468 பேர் பாதிப்பு 0

🕔11:55, 4.டிசம்பர் 2019

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 4 ஆயிரத்து 252 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதோடு முப்படையினரும், பொலிஸாரும் இணைந்து பொதுமக்களின் நலன்புரி விடயங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

Read Full Article

Default