மட்டகளப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி..

மட்டகளப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி.. 0

🕔11:22, 30.டிசம்பர் 2019

மட்டகளப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் ப்ரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 1958ம் ஆண்டு சிவில் விமான சேவைகள் திணைக்களத்தால் மட்டகளப்பு விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாளாந்தம் காலை 08.00 மணி முதல், மாலை 06 மணிவரை விமான நிலையத்தினூடாக, உள்நாட்டு

Read Full Article
பஸ்களில் அதிக சத்தத்துடனான பாடல் ஒலிபரப்பு தொடர்பில் முறையிட துரித தொலைபேசி இலக்கம்

பஸ்களில் அதிக சத்தத்துடனான பாடல் ஒலிபரப்பு தொடர்பில் முறையிட துரித தொலைபேசி இலக்கம் 0

🕔11:16, 30.டிசம்பர் 2019

தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படின் அது குறித்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். 1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் பாடல்கள் ஒலிரப்பவும், வீடியோக்களை காட்சிப்படுத்தவும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய

Read Full Article
சீனாவில் பாலியல் குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனை முறையில் மாற்றம்

சீனாவில் பாலியல் குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனை முறையில் மாற்றம் 0

🕔11:13, 30.டிசம்பர் 2019

சீனாவில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிற பெண்கள் கைதுசெய்யடுகின்றபோது 2 ஆண்டுகள் காவல் மையங்களில் வைக்கப்பட்டனர். அதன்போது அவர்கள் பொம்மைகள், வீட்டு வசதி சாதனங்கள் செய்கிற பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். குறித்த தண்டனை முறையை சீனா முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது. இதற்கமைய தற்போது காவலில்

Read Full Article
மீன்பிடி கைத்தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்

மீன்பிடி கைத்தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம் 0

🕔11:10, 30.டிசம்பர் 2019

மீன்பிடி கைத்தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிகளவான மீன்கள் காணப்படும் இடங்களை அறிந்துகொள்வதற்கென ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மீன்பிடி ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு மாதங்களுக்குள் குறித்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
மின்சார தாக்குதலுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி 0

🕔11:06, 30.டிசம்பர் 2019

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி மாத்தளை உக்குவெல பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தாய், தந்தை மற்றும் மருமகளே உயிரிழந்தவர்களென தெரியவந்துள்ளது. வெளியில் சென்ற தந்தை வீட்டுக்கு வருகைதராத நிலையில், தாய் மற்றும் மருமகள் அவரை தேடிச்சென்றுள்ளனர். அதன்போது மின்சார வேலியில் சிக்கியிருந்த தந்தையை காப்பாற்ற முயற்சிக்கையில் மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கை : கிம் ஜோன் உன்

நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கை : கிம் ஜோன் உன் 0

🕔11:02, 30.டிசம்பர் 2019

நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன் தெரிவித்துள்ளார். பியோன்யேன் நகரில் இடம்பெற்ற கட்சி தலைவர் மாநாட்டின்போதே வடகொரிய தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடகொரிய தலைவரின் கருத்து அசாதாரணமானதென அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுடன் , வடகொரியா மேற்கொள்ளவிருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. இவ்வாண்டு

Read Full Article
உலகின் வயதான காண்டாமிருகம் 57 ஆவது வயதில் உயிரிழப்பு

உலகின் வயதான காண்டாமிருகம் 57 ஆவது வயதில் உயிரிழப்பு 0

🕔10:55, 30.டிசம்பர் 2019

உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்துள்ளது. தான்சானியா வனவிலங்கு புகழிடத்தில் வாழ்ந்த பாஸ்டா எனப்படும் குறித்த பெண் காண்டாமிருகம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது 57 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக காண்டாமிருகம் 37 முதல், 43 வயது வரையே வாழ முடியும். எனினும் சிறந்த பராமரிப்பு காரணமாக பாஸ்டா காண்டாமிருகம் 57 வருடங்கள்

Read Full Article
ஏரியொன்றில் நீராடச்சென்ற தாயும் மகனும் உயிரிழப்பு

ஏரியொன்றில் நீராடச்சென்ற தாயும் மகனும் உயிரிழப்பு 0

🕔10:55, 30.டிசம்பர் 2019

ஏரியொன்றில் நீராடச்சென்ற தாயும், மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குருநாகல் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொதுஹெர – மஹபிட்டிய கஹகமுவ ஏரியில் நீராடச்சென்றவர்களே அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 44 வயதான தாயும், 15 வயதான மகனும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்;. சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
அதிக குளிரான காலநிலையால் பங்களாதேசில் 50 பேர் உயிரிழப்பு

அதிக குளிரான காலநிலையால் பங்களாதேசில் 50 பேர் உயிரிழப்பு 0

🕔10:49, 30.டிசம்பர் 2019

அதிக குளிரான காலநிலையால் பங்களாதேசில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் வடபகுதியிலுள்ள டெட்டுலியா பிரதேசத்தில் 4.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொற்று நோய்கள் மற்றும் அதிக குளிர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
வவுனியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயம்

வவுனியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயம் 0

🕔10:44, 30.டிசம்பர் 2019

வவுனியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டி, குருதுபிட்டி பகுதியில் வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இரட்டை பெரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default