சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது 0
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனாகலை டி.பி பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு தேயிலை மலைக்குள் இவர்கள் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் தேயிலை செடிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.