சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த ஐவர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 10:38

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த ஐவர் கைது

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த ஐவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதிக்கு படகு மூலமாக அவர்கள் வருகைதந்துள்ளமை தெரியவந்துள்ளது. தலைமன்னார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது மறைந்திருந்த நிலையில் ஐவரும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் இங்கிரிய பகுதியை சேர்ந்த பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ஏனையவர்கள் பேசாலை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 10:38

Default