இந்தியாவின் வடக்கு பகுதியில் கடும் பனி மற்றும் வாயு மாசடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 500 விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவான வீதி விபத்துக்களும் பதிவாகி வருகின்றன. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 1901ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் அதிக குளிருடன் கூடிய காலநிலை தற்போது பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வாயு மாசடைவால் அதிகளவான சுகாதார பாதிப்புக்கள் பதிவாகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் வடக்கு பகுதியில் கடும் பனி மற்றும் வாயு மாசடைவு
படிக்க 0 நிமிடங்கள்