அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு
Related Articles
அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள வரி குறைப்பின் பலன்களை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் தெரிவித்தார்.
27ம் திகதி வெளியான வர்த்தமானியூடாக சீமெந்து 50 கிலோகிராம் சீமெந்து பக்கெற்றுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அதிக விலையில் அரிசி விற்பனையில் ஈடுபட்ட 860 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக எம்.எஸ்.எம்.பௌசர் தெரிவித்தார். அதேபோல் 3 ஆயிரத்து 402 பேருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக இதுதொடர்பான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுமெனவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் தெரிவித்தார்.