வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:34

வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைது

வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறைந்த நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு குறித்த நபர்கள் ஒருவரிடமிருந்து தலா 10 ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொள்வதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இதுபோன்ற மேலும் பலர் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:34

Default