fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போக்குவரத்து துறையில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:30

போக்குவரத்து துறையில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கம்

போக்குவரத்து துறையின் எதிர்கால மாற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தெளிவுபடுத்தும் பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெறுகிறது. எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் போக்குவரத்து துறையில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அதுதொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை பஸ் வண்டிகளில் ஒலிபரப்பு செய்வதற்கு நல்லெண்ண பாடல்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று முற்பகல் ஆரம்பமானது.

மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் இந்நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டது. கல்வியியலாளர்கள் சபையின் மேற்பார்வையின் கீழ் நல்ல கருத்துக்களையுடைய பாடல்கள் தெரிவுசெய்யப்பட்டதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே இவ்வாறான நல்ல கருத்துக்களையுடைய பாடல்களை வழங்கும் நடவடிக்கை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க