fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவில் சிக்கி மூவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 15:32

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவில் சிக்கி மூவர் உயிரிழப்பு

இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், பனிச்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். பனிச்சறுக்கு விளையாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் ஈடுபட்டிருந்த போது பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது, 35 வயது பெண்ணும், அவரது 7 வயதுமதிக்க தக்க இரண்டு மகள்களும் பனிச்சரிவில் மிக ஆழத்தில் சிக்கி கொண்டனர். ஐந்து மணி நேர மீட்பு பணியின் பின்னர் குறித்த பெண்ணும், இன்னொரு சிறுமியும் மீட்கப்பட்டனர்.

எனினும் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் ஜேர்மனியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 15:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க