பஸ்களில் அதிக சத்தத்துடனான பாடல் ஒலிபரப்பு தொடர்பில் முறையிட துரித தொலைபேசி இலக்கம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:16

பஸ்களில் அதிக சத்தத்துடனான பாடல் ஒலிபரப்பு தொடர்பில் முறையிட துரித தொலைபேசி இலக்கம்

தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படின் அது குறித்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். 1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் பாடல்கள் ஒலிரப்பவும், வீடியோக்களை காட்சிப்படுத்தவும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:16

Default