fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 18:28

அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி

நியுசிலாந்துக்கு எதிரான இராண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டி கடந்த 26 ம் திகதி மெல்பேர்ணில் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு முதல் இனிங்சை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

319 ஓட்டங்கள் முன்னிலையிர் இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதற்கமைய இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 240 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் ட்ரவீஸ்ஹெட் தெரிவானார். 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 2 க்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 18:28

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க