fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கசகஸ்தான் விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 13:23

கசகஸ்தான் விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

கசகஸ்தான் நாட்டில் விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 8 பேர் சிறுவர்களென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கசகஸ்தான் அல்மெட்டி நகரிலிருந்து நூர் சுல்தான் நகர் நோக்கி 98 பேருடன் பயணித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் விபத்தை சந்தித்துள்ளது. இரு மாடி கட்டிடமொன்றில் விமானம் மோதுண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 6 பேர் சிறுவர்களென கசகஸ்தான் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் ஆராய்வதற்கென விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமானவர்கள் சட்ட அடிப்படையில் தண்டிக்கப்படுவார்களென கசகஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை கசகஸ்தானில் கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற இவ்வாறானதொரு விபத்தில் 20 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க