துடுப்பாட்டத்தில் மாத்திரமன்றி பந்துவீச்சிலும் கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்தியூஸ் அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இடம்பெறவுள்ள டுவெண்டி – 20 உலக்கிண்ண தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக எஞ்சலோ மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பெடுத்தாடிவரும் நிலையில் பந்துவீச்சு தொடர்பில் அவர் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. எனினும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் பின்னர் டுவெண்டி – 20 தொடரில் பந்துவீச்சாளராக செயற்பட வேண்டுமென கிரிக்கெட் தேர்வாளர்கள் ஆலோசனை வழங்கினர். அதற்கமைய வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அணியை கட்டியெழுப்புவதோடு, சிறந்த வீரர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு அணித்தலைமைத்துவத்திடம் காணப்படுகிறது. அந்த பொறுப்பை தமது அணியின் தலைமை பொறுப்பாளர் மிக்கி ஆர்தர் சிறப்பாக மேற்கொள்வதாக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.