பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாதணிகள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:22

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாதணிகள்

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த மாதம் 3ம் திகதியளவில் இலவச சீருடை மற்றும் பாதணிக்கான வவுச்சர் வழங்கப்படுமென கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

திறந்த சந்தையூடாக சீருடை மற்றும் பாதணிகளை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கேகாலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சுமார் 44 இலட்சம் மாணவர்கள் பாடசாலை கல்வியை பெறுகின்றனர். 2ம் திகதி முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்று குறுகிய காலப்பகுதிக்குள் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாதணியை வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:22

Default