fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 13:19

சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி

சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி வழங்கவுள்ளது. அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

திட்டத்திற்கென 14 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன. திட்டத்தினூடாக 6 மாகாணங்களை சேர்ந்த 4 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர விவாயிகள் பயன்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. நீர் முகாமைத்துவ திட்டம், குளங்களை புனரமைத்தல், புதிய கால்வாய் கட்டமைப்புக்களை அமைத்தல், குளங்களை சுத்திகரித்தல், விவசாய பாதைகளை புனரமைத்தல், விற்பனை நிலையங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 2024ம் ஆண்டளவில் செயற்திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மகாவலி விவசாய நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo