fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விடுமுறைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2019 13:19

விடுமுறைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

விடுமுறைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலை விடுமுறை காலம் மற்றும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் கண்டிக்கிடையிலும் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கிடையிலும் குறித்த ரயில்கள் சேவையில் ஈடுபடுமென ரயில்வே போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். அதற்கமைய தினந்தோறும் காலை 9 மணிக்கு கொழும்பிலிருந்து கண்டி நோக்கி விசேட ரயில் சேவையில் ஈடுபடும்.

அதே ரயில் மாலை 4.55 மணிக்கு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும். அதேபோல் பயணிகளின் நன்மை கருதி இன்றும், 27ம் திகதியும், 29ம் திகதியும் பதுளைக்கான இரவு தபால் ரயிலுக்கு முன்பதாக கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 7.30 மணிக்கு ரயிலொன்று பதுளை நோக்கி புறப்படவுள்ளது. இதற்கு இணைவாக பதுளையிலிருந்து இரவு 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி ரயிலொன்றும் புறப்படுமென ரயில்வே போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையும் விசேட பஸ் சேவைகளை முன்னெடுத்துள்ளது. புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து மாகாணங்களுக்கு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான நடவடிக்கை அத்தியட்சகர் நிஹால் ஹிதெல்ல ஆராச்சி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2019 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க