வெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெட் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் தினங்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையலாமென உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நதுன் குருக்கே தெரிவித்துள்ளார். வெட்வரி மறுசீரமைப்பின் ஊடாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிணைவாக நாட்டிற்கு அதிகளவான வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப்பெறுமென பொருளியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.