பாராளுமன்ற உறுப்பினல் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் அறிக்iயொன்றை சமர்ப்பிக்குமாறு பதில்பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு இக் கோரிக்கையினை விடுத்துள்ளது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்திற்கு அமைய இந்நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைதுசெய்யும் போது கடைபிடிக்கவேண்டிய சம்பிரதாய முறையினை பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைதின் போது கடைபிடிக்கவில்லையென குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பிலேயே தேசிய பொலிஸ் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.