சீனாவின் தென்பகுதியிலுள்ள குவாங்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடத்தின் ஒரு வீட்டில் பற்றிய தீ அருகாமையில் உள்ள வீடுகளுக்கு பரவியுள்ளது. ஸ்த்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுளவந்துள்ளனர். இதன்போது உடல் கருகிய நிலையில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சீன பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.