fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிவனொளிபாதமலை யாத்திரைக்கென வருகைத்தந்த 14 இளைஞர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 15:32

சிவனொளிபாதமலை யாத்திரைக்கென வருகைத்தந்த 14 இளைஞர்கள் கைது

சிவனொளிபாதமலை யாத்திரைக்கென வருகைத்தந்த 14 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் போதைப்பொருளுடன் வருகைத்தந்ததாக ஹட்டன் குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல சோதனைச்சாவடியில் வைத்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே குறித்த 14 பேரும் கைதாகினர்.

அவர்களிடமிருந்து அயிஸ், ஹெரோயின், மதனமோதகம், கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, அவிசாவளை, காலி, எல்ப்பிட்டிய, கம்பஹா ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். 14 பேரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 15:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க