வெல்லவாய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெல்லவாய பொலிஸார் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லவாய மற்றும் புத்தல பிரதேசங்களை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களென தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஏனைய இருவரிடமிருந்தும் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவர்கள் நேற்றைய தினம் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.