அரசாங்கத்திடம் காணப்படும் சகல நெற் தொகையும் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் அரிசியாக மாற்றப்பட்டு, சந்தைக்கு விநியோகிக்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி தட்டுப்பாட்டு காணப்படுவதாக நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள போலி சித்தரிப்புக்கு முகங்கொடுப்பதற்கான சகல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் முன்னnடுக்கப்பட்டுள்ளது.