fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ்ப்பாணம் அரசடி பகுதியை மையமாக கொண்டு இன்று விசேட சோதனை நடவடிக்கைகள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 15:36

யாழ்ப்பாணம் அரசடி பகுதியை மையமாக கொண்டு இன்று விசேட சோதனை நடவடிக்கைகள்

யாழ்ப்பாணம் அரசடி பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு செயலாளரினூடாக, வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.

இதில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாரிய வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

வன்முறை, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இதனை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயற்பாடுகளை அடக்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க