fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பர்வேஷ் முஷாரபின் வழக்கு தொடர்பான தீர்ப்புரை வெளியீடு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 13:38

மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பர்வேஷ் முஷாரபின் வழக்கு தொடர்பான தீர்ப்புரை வெளியீடு

தேசத்துரோக வழக்கில் மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபின் வழக்கு தொடர்பான தீர்ப்புரை வெளியிடப்பட்டுள்ளது. தண்டனைக்கு முன் முஷாரப் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது உடலை பொது இடத்தில் மூன்று தினங்கள் தூக்கில் தொங்கவிட வேண்டுமென குறித்த தீர்ப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றில் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. அதற்கமைய கடந்த 17ம் திகதி அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. நேற்றையதினம் தீர்ப்பு தொடர்பான விபர அறிக்கை 167 பக்கங்களில் வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் முஷாரப் தண்டனை காலத்திற்கு முன்பே இறந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 13:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க