குற்றம் எதுவும் செய்யாமலேயே பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 194 பேரும் வாக்களித்துள்ளனர். பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற கூடாது என்பதற்காக ஜனநாயக கட்சியினர் செய்த சூழ்ச்சி தான் தன் மீதான பதவி நீக்க தீர்மானம் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது
படிக்க 1 நிமிடங்கள்