அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு அவசரகால நிலை
Related Articles
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு ஒரு வார அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதை அடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் 7 நாட்களுக்கு குறித்த அவசரகால நிலை அமுலில் இருக்குமென அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நியூ சௌத் வேல்ஸில் சுமார் 100 இடங்களில் பரவிவரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, அவுஸ்ரேலியாவின் காட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் கடுமையான வறட்சி ஆகியவை நாட்டின் காலநிலைக் கொள்கைகள் குறித்து விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.