fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

MCC ஒப்பந்த நடைமுறையை கைவிட அமைச்சரவை தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2019 13:00

MCC ஒப்பந்த நடைமுறையை கைவிட அமைச்சரவை தீர்மானம்

எம்.சி.சி ஒப்பந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. அதுதொடர்பில் கண்டறிவதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் கண்டறிய நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் லலித் குணருவன், போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ். ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்த்தன உள்ளிட்டோர் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சம்ர்ப்பிப்பர். ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதோ அதை நடைமுறைப்படுத்துவதோ அல்லது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு எவ்வித செயற்பாடும் மேற்கொள்ளப்படாது. அதற்கமைய எம்.சி.சி ஒப்பந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2019 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க