fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2019 12:52

ஜனாதிபதி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவுறுத்தல்

அத்தியவசிய பொருட்களை துரிதமாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவித்துள்ளார். அரிசிக்கென உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையின் விநியோக நிலை தொடர்பில் கண்டறிந்து தேவையான அளவு அரிசியை நாளாந்தம் பகிர்ந்தளிப்பதற்கென குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

புறக்கோட்டை மற்றும் ஏனைய பிரதான சந்தைகளில் அரிசி விநியோகஸ்த்தர்கள் தொடர்பில் கண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்போகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறுவடையைக் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவை குறைத்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு வெட் வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நூற்றுக்கு 2 வீதமாக காணப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் வரி மற்றும் ஏனைய மறைமுக வரி நீக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் விநியோகத்தை மேம்படுத்தி வர்த்தகத்திற்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்கமைய வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களை இணைத்து சிறந்த பிரதிபலனை பாவனையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க