கேகாலை பொலிஸில் பணியாற்றிய இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்திற்கு வரும் நபர்களை முழுமையாக சோதனையிட தவறியதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கேகாலை நீதிமன்ற வளாகத்தில் வைத்து 36 வயது பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டார். வழக்கொன்றுக்காக வருகைதந்த பெண் கத்திக்குத்துக்கு இலக்கானார். சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தவர்களை உரிய முறையில் சோதனையிட தவறியமை காரணமாக நேற்றையதினம் கடமையிலிருந்த இரு பொலிஸ் சார்ஜன்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.