முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹெமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு
படிக்க 0 நிமிடங்கள்